1 00:00:06,382 --> 00:00:10,852 க்ளைனரின் கழுத்தை பார்த்தா, அவங்க வெனசுயேலாவிலிருந்து வந்தவங்கன்னு தெரியுது. 2 00:00:12,847 --> 00:00:16,137 - உனக்கெப்படி அது தெரியும்? - அது வெனசுயேலா பட்டர்ஃப்ளை வெட்டு. 3 00:00:16,142 --> 00:00:18,982 மூச்சு திணறல் மற்றும் ரத்த போக்கு சேர்ந்து ஆகும், 4 00:00:18,978 --> 00:00:20,648 அப்போ உன் ரத்ததிலேயே மூழ்குவே. 5 00:00:21,647 --> 00:00:25,687 க்ளைனருக்கு வெனசுயேலாவில் யாரோ இருந்திருக்கணும். அவன் கூட வேலை செய்தவன். 6 00:00:25,693 --> 00:00:26,903 அல்லது அவனுக்காக. 7 00:00:26,986 --> 00:00:29,946 யாருக்கோ இது இப்படி குழப்பமா ஆனது பிடிக்கலை. 8 00:00:29,947 --> 00:00:33,657 நாம் பாஸ் என நினைத்தவனையே கொலை செய்யும் அளவு அதிகாரம் கொண்டவன். 9 00:00:33,743 --> 00:00:36,373 ஒரு உயரமான, ஞானியான மனிதன் ஒரு முறை சொன்னான், 10 00:00:36,454 --> 00:00:38,714 "ஒரு காவல் நாயை கொல்ல மாட்ட 11 00:00:38,706 --> 00:00:41,746 "அதை போல மோசமான இன்னொன்று இருக்குன்னு தெரிந்தாலொழிய." 12 00:00:41,751 --> 00:00:44,501 வெனசுயேலாவிலிருந்து கட்டுபடுத்த ஆள் வந்திருக்கோ? 13 00:00:44,587 --> 00:00:45,837 இருக்கலாம். 14 00:00:46,297 --> 00:00:48,667 எப்போ கடைசியா ரகசிய கண்காணிப்பு செஞ்சே? 15 00:00:48,758 --> 00:00:50,378 க்ளைனர் காம்பௌண்ட்? 16 00:00:50,468 --> 00:00:53,138 தலைமை மாறும்போது தவறு ஏற்படலாம். 17 00:00:53,137 --> 00:00:55,307 அது நடக்கும் போது நான் பார்க்கணும். 18 00:00:56,474 --> 00:00:59,484 நமக்கு கார் வேணும், என் காரை எல்லார்க்கும் தெரியும், 19 00:00:59,477 --> 00:01:01,517 உன்னோட பென்ட்லி கண்ணை உறுத்தும். 20 00:01:01,604 --> 00:01:03,234 நான் பார்த்துக்கறேன். 21 00:01:05,316 --> 00:01:06,726 இது ஸ்டேஷனிலிருந்து. 22 00:01:06,734 --> 00:01:09,074 அதிகாரபூர்வமா சாணம் மின்விசிறியில் தெரித்தது. 23 00:01:09,153 --> 00:01:12,453 சாணமா? சும்மா வாய் விட்டு திட்டு ஃபின்லி. 24 00:01:13,699 --> 00:01:18,659 ரீச்சர் 25 00:01:26,712 --> 00:01:29,382 தொலைபேசியில் வாலன்டியர்கள் வேலை செய்யட்டும். 26 00:01:29,465 --> 00:01:31,925 ஸ்டீவன்சன், போக்குவரத்து காமெராவிலிருந்து 27 00:01:31,926 --> 00:01:34,926 க்ளைனர் வீடு போகும் செக்யூரிடி காட்சிகளை தேடி பிடி. 28 00:01:34,929 --> 00:01:38,469 அந்த கூகில் செயற்கைகோள் விஷயம் எதாவது கிடைக்குமான்னு பாரு. 29 00:01:38,474 --> 00:01:41,234 அப்படியெல்லாம் கூகில் வேலை செய்யாது, சார். 30 00:01:41,227 --> 00:01:44,727 மார்க்ரேவ் மக்களுக்கு மனம் பேதலிக்கிறது. சொன்னத செய்! 31 00:01:44,814 --> 00:01:46,864 - சரி, சார். - ஹே, பேக்கர். 32 00:01:46,941 --> 00:01:49,071 ஒரு அறிக்கையை தயார் செய்வோம், 33 00:01:49,068 --> 00:01:53,198 "நாங்கள் இன்னும் தகவல் சேகரிக்கும் நிலையில் உள்ளோம்... 34 00:01:54,698 --> 00:01:57,078 "இத்யாதி, இத்யாதி." 35 00:01:58,244 --> 00:02:02,124 மோரிசன் உட்பட நாம் வேலை செய்து கொண்டிருந்த எல்லாம் ஓரங்கட்டு. 36 00:02:02,206 --> 00:02:03,916 - எங்க கண்டு பிடிச்சாங்க? - ஆஃபிஸ். 37 00:02:03,916 --> 00:02:06,496 - செக்ரெடரி காலைல கண்டு பிடிச்சா. - சரி. 38 00:02:06,502 --> 00:02:09,092 கௌன்டி தடயவியல் அங்க ஏற்கனவே இருக்கும் இல்லையா? 39 00:02:09,088 --> 00:02:11,338 - எதாவது கிடைச்சுதா? - இன்னும் இல்லை. 40 00:02:11,340 --> 00:02:13,180 நான் அங்கே போறேன். 41 00:02:13,259 --> 00:02:16,429 இன்னும் எங்கப்பா குற்றவாளின்னு நினைக்கிறையா, கேவலமானவனே? 42 00:02:16,512 --> 00:02:19,772 - அமைதி, அமைதி! - உன் கைய என் மேலிருந்து எடு! 43 00:02:19,849 --> 00:02:23,099 போனா போகுதுன்னு விடறேன், உன் நிலைமைய யோசிச்சு. 44 00:02:23,102 --> 00:02:25,022 ஆனா மறுபடியும் கைய தூக்கினா, 45 00:02:25,104 --> 00:02:28,234 இது விரைவில் வேற விதமா ஆகும். 46 00:02:30,150 --> 00:02:32,280 - நீ நாச... - இல்லை, இல்லை. அமைதியாகு! 47 00:02:32,278 --> 00:02:34,488 எங்கப்பாவை கொலை செய்தவர்ன்னே. 48 00:02:34,572 --> 00:02:37,282 இந்த சமூகத்துக்கு கொடுத்ததை தவிர எதுவும் செய்யாத 49 00:02:37,283 --> 00:02:40,043 மனிதரின் பெயரையும் புகழையும் கெடுக்கப் பார்த்த! 50 00:02:40,119 --> 00:02:43,159 உணர்ச்சி வசபட்டிருக்கே கேஜே, உன் இழப்புக்கு வருந்தறேன். 51 00:02:43,247 --> 00:02:46,377 ஆனா இந்த ஊரில் என் வேலையை தவிர நான் எதுவும் செய்ததில்லை. 52 00:02:46,375 --> 00:02:48,375 நாசமா போ, வெளியிலிருந்து வந்தவனே. 53 00:02:49,128 --> 00:02:50,548 இப்போ, என் ஆஃபிஸுக்கு போ! 54 00:02:56,844 --> 00:02:59,104 ஒருவேளை, நீ கொஞ்சம் வெளியே போகணும். 55 00:02:59,096 --> 00:03:01,766 இப்போ குற்ற தளத்திற்கு போகாதே, 56 00:03:01,849 --> 00:03:03,889 எல்லாம் அடங்கும் வரை. 57 00:03:03,893 --> 00:03:08,193 உங்க சீஃப் டிடெக்டிவை குற்ற காட்சிகள் பழசாகும் வரை இருக்க சொன்னீங்களா? 58 00:03:08,272 --> 00:03:10,272 கொஞ்சம் நேரம் விலகியிருக்க சொன்னேன். 59 00:03:10,274 --> 00:03:13,194 இந்த ஊரின் கொடை வள்ளலை கொலகாரன்னு குற்றம் சாட்டினே, 60 00:03:13,277 --> 00:03:16,527 அவரும் மற்றவரை போல் பாதிக்கபட்டவர்தான்னு இப்போ தெரியவந்தது. 61 00:03:16,614 --> 00:03:19,704 உன்னை பற்றிய நல்ல எண்ணம் இப்போ இங்க நிறைய இல்ல. 62 00:03:19,700 --> 00:03:21,160 நான் உனக்கு உதவி செய்யறேன். 63 00:03:21,160 --> 00:03:25,750 அதனால போய் உக்காரு, நான் சீக்கிரமே திரும்ப கூப்பிடுவேன். 64 00:03:44,391 --> 00:03:47,601 - அது நல்ல ஒரு வண்டி. - ஓரிடத்திலிருந்து ஓரிடம் போக உதவது. 65 00:03:47,603 --> 00:03:51,153 உண்மையில் எனக்கு பிரிடிஷ் கார்கள் ரொம்ப தெரியாது. 66 00:03:51,148 --> 00:03:52,978 ஜன்னல்கள் நிறமேற்றப்பட வேண்டும். 67 00:03:53,776 --> 00:03:55,356 மூன்று நாட்கள், குறைந்தபட்சம். 68 00:03:55,361 --> 00:03:58,861 - அப்போ எனக்கு கடனா ஒண்ணு வேணும். - நாங்க கடனா கொடுப்பதில்ல. 69 00:04:01,450 --> 00:04:02,740 நிச்சயமா? 70 00:04:08,374 --> 00:04:11,464 என் காரை வேணும்னா நீ இப்போதைக்கு எடுத்துக்கலாம். 71 00:04:12,544 --> 00:04:16,094 அது பென்ட்லி இல்ல ஆனா ஓரிடத்திலிருந்து ஓரிடம் கூட்டி போகும். 72 00:04:17,549 --> 00:04:19,339 அது கச்சிதம். 73 00:04:29,937 --> 00:04:31,687 சாதாரணமா ரோமாக்கள் வாங்குவேன். 74 00:04:31,689 --> 00:04:33,899 இதுங்க தயாரா இல்லை. 75 00:04:33,983 --> 00:04:36,653 அடுத்த வாரம், இது நல்ல சாண்ட்விச் செய்யலாம். 76 00:04:41,949 --> 00:04:43,869 எப்படி செய்யறீங்க, திரு மோஸ்லி? 77 00:04:45,035 --> 00:04:49,955 - எதை செய்யறேன்? - இங்கே இருப்பது. மார்க்ரேவில். 78 00:04:50,582 --> 00:04:53,422 வேற எங்காவது இருப்பது சுலபமா இருக்கும்னு நினைக்கலையா? 79 00:04:53,419 --> 00:04:56,129 நினைப்பா? எனக்கு தெரியும். 80 00:04:57,297 --> 00:04:58,297 அப்ப ஏன் இருக்கணும்? 81 00:05:00,134 --> 00:05:03,144 க்ளைனர்கள விட, டீல்கள விட, ராஸ்கோவின் குடும்பம் 82 00:05:03,137 --> 00:05:08,267 இருந்த கால அளவுக்கு என் குடும்பமும் இங்கே இருந்திருக்கிறது. 83 00:05:08,267 --> 00:05:12,897 நான் ஏன் யாரையும், என்னை என் ஊர் விட்டு விரட்ட அனுமதிக்கணும்? 84 00:05:12,980 --> 00:05:17,110 என்னையும் என் சகோதரியையும் இங்கிருந்து அனுப்புவது சவப் பெட்டியில் தான். 85 00:05:17,109 --> 00:05:20,819 அப்பவும் நாங்க மார்க்ரேவ் கல்லறையில் தான் இருப்போம். 86 00:05:20,821 --> 00:05:24,661 நான் ஏன் இங்கே இருக்கேன் என்பது கேள்வியல்ல. 87 00:05:24,742 --> 00:05:27,242 நீங்க ஏன் இங்க வந்தீங்க என்பது தான் கேள்வி. 88 00:05:27,244 --> 00:05:32,674 ஹார்வர்ட் ஸ்குவேரிலிருந்து மார்க்ரேவ் ரொம்ப தள்ளி இருக்கு. 89 00:05:34,043 --> 00:05:36,173 ரீச்சர் அதையே கேட்டான். 90 00:05:37,004 --> 00:05:38,464 அவன்கிட்ட என்ன சொன்னீங்க? 91 00:05:39,715 --> 00:05:41,505 உங்க கிட்ட சொல்லப் போவதையே. 92 00:05:43,302 --> 00:05:45,682 அது உங்களுக்கு தேவையில்லாதது. 93 00:05:51,685 --> 00:05:54,555 அடுத்த தடவை, ரோமா கொண்டு வாங்க. 94 00:05:56,023 --> 00:05:57,323 செய்வேன். 95 00:06:13,791 --> 00:06:16,091 - முடிந்ததா? - இல்லை. 96 00:06:16,085 --> 00:06:17,795 ஆனா, பாதுகாவல் கொண்டு வந்தேன். 97 00:06:20,881 --> 00:06:23,721 - ராஸ்கோ. சிறிது மார்க்ரேவ் தொடர்பு. - ஹே. 98 00:06:23,801 --> 00:06:25,341 சமாளிக்கிறயா? 99 00:06:27,012 --> 00:06:28,722 ஏதோ கொஞ்சமா. 100 00:06:30,015 --> 00:06:32,265 செட்லெர்ஸ் ஆஃப் கடான் விளையாட தெரியுமா? 101 00:06:32,351 --> 00:06:35,021 - இது போர்ட் கேம் சென்ட்ரல் போல. - அது நல்லது. 102 00:06:35,104 --> 00:06:37,734 - வேலை குடுக்கற. - இப்போதைக்கு. பயப்படறாங்க. 103 00:06:37,815 --> 00:06:39,475 எனக்கும் பயம்தான். 104 00:06:39,900 --> 00:06:42,320 எங்கே என் மரியாதை? தண்ணீர் கொண்டு வரேன். 105 00:06:42,319 --> 00:06:44,029 நன்றி. 106 00:06:44,822 --> 00:06:46,662 அவள் சிதறி போய் இருக்கா. 107 00:06:48,450 --> 00:06:51,330 இந்த இடத்தில் ஒரு முறை ஒரு மாப் சாட்சி இருந்தான். 108 00:06:51,328 --> 00:06:53,538 கதவு வலுப்படுத்தியது, நல்ல அலாரம் இருக்கு. 109 00:06:53,539 --> 00:06:55,119 ஆனா உன் உள்ளுணர்வை உபயோகி. 110 00:06:55,124 --> 00:06:58,094 அபாயம்னு தோன்றினா, அந்த குடும்பத்தோட ஓடு. 111 00:06:58,210 --> 00:06:59,290 மன்னியுங்க, பெண்களே. 112 00:07:00,045 --> 00:07:03,835 சரி. நான் கிளம்பறேன். இரண்டு நாளில் தொடர்பு கொள்வேன். 113 00:07:03,841 --> 00:07:06,051 பரவாயில்ல, நான் போகணும். 114 00:07:06,135 --> 00:07:07,585 இப்போ, விதிகள் என்ன? 115 00:07:07,678 --> 00:07:11,518 இரண்டு பூட்டு, தூங்கையில் விளக்கு கூடாது, நெருப்பு ஏத்த வேண்டாம். 116 00:07:11,515 --> 00:07:13,225 நீ இதை தாண்டி வருவே. 117 00:07:15,144 --> 00:07:16,564 நன்றி. 118 00:07:18,272 --> 00:07:20,402 நீங்க செய்த எல்லாத்துக்கும் நன்றி. 119 00:07:20,399 --> 00:07:22,439 உன்னை நல்ல கைகளில் விட்டு போறேன். 120 00:08:07,863 --> 00:08:11,073 காய்ந்த மாட்டிறைச்சி? மூடின இடத்தில்? 121 00:08:11,158 --> 00:08:13,578 புரதம், இரும்பு, துத்தநாகம். 122 00:08:13,577 --> 00:08:15,577 இன்சுலினை மேலே ஏத்தாது. 123 00:08:16,788 --> 00:08:18,078 எனக்கு ஜெர்கி பிடிக்கும். 124 00:08:21,293 --> 00:08:23,463 நீக்லி எனக்கு நல்லதை அறிமுகப்படுத்தினா. 125 00:08:31,345 --> 00:08:34,175 அப்போ நீக்லி? தோழியா? 126 00:08:35,307 --> 00:08:39,097 - 110ல் சேர்ந்து பணியாற்றினோம். - அப்போ அவள் தோழி. 127 00:08:39,186 --> 00:08:42,606 - அப்படி சொல்லலாம். - நான் அப்படிதான் சொன்னேன். 128 00:08:42,606 --> 00:08:45,776 - நீ ஏன் அப்படி கூப்பிடல? - நான் நீக்லின்னு கூப்பிடுவேன். 129 00:08:52,491 --> 00:08:54,331 இந்த ஒன்-டெந்த் என்ன சமாசாரம்? 130 00:08:54,743 --> 00:08:56,043 நீண்ட கதை. 131 00:08:57,829 --> 00:08:59,119 வேறு எங்காவது நீ போகணுமா? 132 00:09:03,126 --> 00:09:06,916 இராணுவம் என்னை சொந்த ஸ்பெஷல் விசாரணை குழு அமைக்க விட்டது. 133 00:09:06,922 --> 00:09:10,632 பென்டகன் அது தோல்வி அடையும்னு நினைச்சு எனக்கு பொறுப்பை கொடுத்தது. 134 00:09:10,634 --> 00:09:13,104 - நாங்க ஒன்பது பேர் இருந்தோம். - மத்தவங்க எங்க? 135 00:09:13,095 --> 00:09:14,295 தெரியாது. 136 00:09:14,388 --> 00:09:16,348 - நெருக்கமா இல்லையா? - ரொம்ப நெருக்கம். 137 00:09:17,349 --> 00:09:18,979 சேர்ந்து நிறைய அனுபவிச்சோம். 138 00:09:20,143 --> 00:09:22,733 - ஆனா அது நான் இராணுவத்தில் இருந்த போது. - இப்போ? 139 00:09:24,648 --> 00:09:26,108 நான் இராணுவத்தில் இல்லை. 140 00:09:36,076 --> 00:09:38,156 வருஷ கணக்கா அண்ணன் கிட்ட பேசல. 141 00:09:38,245 --> 00:09:40,615 இராணுவ நண்பர்களோட தொடர்பு இல்லை. 142 00:09:40,706 --> 00:09:42,786 எப்படி எல்லா உறவையும் சுலபமா விடற? 143 00:09:43,458 --> 00:09:45,998 - அது நல்லதில்ல. - நீ சொல்கிறாயா. 144 00:09:46,003 --> 00:09:47,923 நகர்ந்துபோ, ஃபின்லி. 145 00:09:48,005 --> 00:09:50,295 மரங்கள் உன்னை விட வேகமா வளையங்களை கழட்டும். 146 00:09:54,678 --> 00:09:56,388 என் மனைவி இறந்திட்டா. 147 00:09:58,932 --> 00:10:02,312 அவள் இறந்திட்டா, ஆனாலும் என்னால் இந்த மோதிரத்தை கழட்ட முடியல. 148 00:10:02,311 --> 00:10:03,981 நீ எங்கிட்ட அப்படி சொல்லல. 149 00:10:03,979 --> 00:10:06,359 அவள் பெயர் ஷேரன் என்று தான் சொன்னேன். 150 00:10:06,440 --> 00:10:09,150 நாங்க விவாகரத்தானதா நீ சொன்னதை சரினு சொல்லலயே. 151 00:10:09,151 --> 00:10:12,201 - ஏன் என்னை திருத்தல? - நான் யாரையும் திருத்தமாட்டேன். 152 00:10:13,030 --> 00:10:14,870 எனக்கு யாரோட பரிதாபமும் தேவையில்லை. 153 00:10:16,533 --> 00:10:19,293 என்னை போல் ஒருவனை எல்லாரும் நினைப்பது, 154 00:10:20,829 --> 00:10:23,749 முசுடு, பிடிவாதமானவன்... 155 00:10:23,749 --> 00:10:26,339 - சரியான தொல்லை. - சரியான தொல்லை. 156 00:10:28,211 --> 00:10:30,801 அவள் என்னை விட்டு போயிருப்பானு ஊகிக்கிறாங்க. 157 00:10:33,592 --> 00:10:35,092 அதான் பாஸ்டனை விட்டியா? 158 00:10:37,971 --> 00:10:42,641 பார்க்கும் இடமெல்லாம் உன் காதலியின் நினைவாயிருக்கும் 159 00:10:42,726 --> 00:10:44,346 ஒரு ஊரில் வாழ்ந்து பார். 160 00:10:45,062 --> 00:10:50,152 உணவகங்கள், ரயில் நிறுத்தங்கள் ஒவ்வொன்றும் கொடிய தண்டனையா வருத்தும். 161 00:10:52,194 --> 00:10:55,994 - நான் அவளை கைவிட்டேன்னு ஞாபகபடுத்தும். - அதான் உனக்கு சொல்லிக்கிறையா? 162 00:10:56,073 --> 00:11:00,623 எப்படியாவது அவளை குணப்படுத்துவேன்னு சத்தியம் செய்தேன். 163 00:11:05,874 --> 00:11:08,254 இப்போ மாசந்தோறும் ஒரு மொபைல் பில் கட்டறேன், 164 00:11:09,378 --> 00:11:11,708 அவ குரல் வாய்ஸ்மெயிலில் கேட்பதற்காக. 165 00:11:12,130 --> 00:11:16,050 அப்போ புகை கடைக்கு மேல் வாழ்ந்து கொண்டு, புகைபிடிப்பதை விட பாக்கற, 166 00:11:16,051 --> 00:11:18,761 ஜார்ஜியாவில் வெயிலில் ட்வீட் உடை அணிந்து, 167 00:11:18,762 --> 00:11:20,812 பொட்டல் காட்டில் வேலையில் இருக்கியா? 168 00:11:20,806 --> 00:11:24,886 உன் மனைவிய காப்பாத்த முடியாததற்கு செய்யும் பாவ விமோசனமா? 169 00:11:24,893 --> 00:11:26,653 அப்படி ஏதோ ஒன்று. 170 00:11:32,067 --> 00:11:34,027 சரி, அது முட்டாள்தனம். 171 00:11:34,111 --> 00:11:36,951 அப்படி நீ நினைச்சா, நீ நிஜமா முட்டாள். 172 00:11:38,115 --> 00:11:39,365 போய் முட்டிக்கோ. 173 00:11:40,784 --> 00:11:43,874 நீ திட்டினா எனக்கு பிடிக்குது. அடிக்கடி அதை செய்யணும் 174 00:11:45,038 --> 00:11:46,828 இரட்டிப்பா முட்டிக்கோ. 175 00:11:55,090 --> 00:11:56,720 ஏதோ நடக்குது. 176 00:12:07,602 --> 00:12:09,902 க்ளைனர் கொலை நடந்து 24 மணி ஆகல. 177 00:12:09,980 --> 00:12:12,320 அவன் மருமகன் விநியோகம் செய்ய போறானா? 178 00:12:13,400 --> 00:12:17,650 கள்ள நோட் இருப்பு குறைவாயிருக்கு, கோஸ்ட் கார்ட் முற்றுகைனால. 179 00:12:17,654 --> 00:12:18,954 பதட்டம் அதிகமானது. 180 00:12:18,947 --> 00:12:21,867 வாங்குபவர்க்கு தங்களின் போலியான பணம் வேண்டும். 181 00:12:21,867 --> 00:12:24,197 அந்த டிரக் முழுக்க அது இருக்கலாம். 182 00:12:25,620 --> 00:12:27,370 போய் பார்ப்போம். 183 00:12:30,208 --> 00:12:32,748 அட, அதுக்குள்ள நள்ளிரவாச்சு. 184 00:12:32,836 --> 00:12:36,256 நீங்க இருவரும், போய் பல்லை தேய்ங்க, அப்புறம் ஆடலாம். 185 00:12:38,216 --> 00:12:41,176 இன்னொரு ஆட்டமா? அவங்க சோர்வடைவதில்லயா? 186 00:12:41,178 --> 00:12:43,428 ஆம், அதாவது, அவங்கள முழிக்க வைக்கிறேன். 187 00:12:43,430 --> 00:12:46,850 அவங்க தூங்கினா, கெட்ட கனவு வருது. அவங்க அப்பாக்கு ஏங்கறாங்க. 188 00:12:47,809 --> 00:12:49,389 எனக்கும் கெட்ட கனவு வரும். 189 00:12:50,729 --> 00:12:55,279 நான் சின்னவளா இருக்கும்போது எங்கப்பாவ இழந்தேன். 190 00:12:55,275 --> 00:12:58,235 - அவரையும், எங்கம்மாவையும். - கடவுளே, என்ன ஆச்சு? 191 00:12:58,320 --> 00:12:59,610 அது கார் விபத்து. 192 00:13:01,031 --> 00:13:03,991 நான் பின்னால் இருந்தேன். நான் பிழைத்தது அதிசயம்தான். 193 00:13:03,992 --> 00:13:05,372 அது பரிதாபமானது. 194 00:13:08,622 --> 00:13:14,252 நான் மருத்துவமனையில் இருக்கும் போது, என் பாட்டி ஹாரி பாட்டர் படிப்பாங்க. 195 00:13:14,336 --> 00:13:16,706 ஏன்னா ஹாரிக்கு அதேதான் சொல்வாங்க. 196 00:13:16,713 --> 00:13:18,223 ஆனா நிஜமா, 197 00:13:18,215 --> 00:13:21,005 அவங்க மந்திரவாதிகள், அவனை காப்பாத்த இறந்தாங்க 198 00:13:21,009 --> 00:13:23,389 மற்றும் உலகை மேம்படுத்த. 199 00:13:23,970 --> 00:13:27,350 நான் எனக்கே பொய் சொல்லிப்பேன், என் பெற்றோர் கூட மந்திரவாதிகள் 200 00:13:27,349 --> 00:13:29,479 அதை செய்யதான் இறந்தாங்கன்னு. 201 00:13:29,476 --> 00:13:31,516 நீ அவங்கள போல இருக்க விரும்பின. 202 00:13:32,604 --> 00:13:34,154 அதான் போலீஸில் சேர்ந்தியா? 203 00:13:35,982 --> 00:13:37,442 அதுதான் நினைச்சேன். 204 00:13:42,405 --> 00:13:44,485 அவங்க நல்லா இருப்பாங்க. 205 00:13:44,491 --> 00:13:48,451 குழந்தைகள் மீண்டு வருவாங்க, மற்றும் நீ இருப்பது அவங்க அதிர்ஷ்டம். 206 00:13:51,331 --> 00:13:52,751 நன்றி. 207 00:13:59,339 --> 00:14:01,969 என்ன நடக்குது? என்ன பாக்கிற? 208 00:14:05,053 --> 00:14:06,103 நாசம். 209 00:14:07,514 --> 00:14:11,524 உன் மகள்களின் ஷூவை போட்டு பின் கதவின் பக்கம் காத்திரு. 210 00:14:14,604 --> 00:14:18,364 நான் கத்தினா, காட்டுக்குள் ஓடு, நிக்காத. 211 00:14:20,068 --> 00:14:22,858 நாம் டென்னிசியில் இருக்கோம். 212 00:14:22,946 --> 00:14:26,116 அவன் கழிவறை போக கூட நிறுத்தல. 213 00:14:28,243 --> 00:14:30,913 ஹே, பின்னால இரு, ரொம்ப பக்கத்துல போற. 214 00:14:30,996 --> 00:14:32,246 நான் நல்லா இருக்கேன். 215 00:14:32,247 --> 00:14:35,077 சாதாரணமா பின் தொடர்வத விட மேலும் பின்னே இருக்கணும். 216 00:14:35,083 --> 00:14:36,633 என் தூரம் சரியானது. 217 00:14:36,710 --> 00:14:39,170 நீ க்ராண்ட் கேரவேனிலிருக்கும் ஒட்டக சிவிங்கி. 218 00:14:39,254 --> 00:14:41,634 எத்தனை முறை பின் தொடர்ந்திருக்கேன் தெரியுமா? 219 00:14:41,715 --> 00:14:44,375 அத்தனை தடவை இல்லை என்பேன். 220 00:14:44,384 --> 00:14:46,514 உன் ஸூட்டை போட்டுகிட்டு உட்காரு. 221 00:14:50,640 --> 00:14:53,100 இன்னொரு ப்ளூஸ் பாட்டு தாங்க முடியாது. 222 00:14:53,101 --> 00:14:55,101 இது டி-போன் வாக்கர். 223 00:14:55,103 --> 00:14:59,023 ஆப்பிரிக்க-அமெரிக்க கலை உணர்வை நிறுவினவர். 224 00:14:59,024 --> 00:15:01,114 டி-போன் வெள்ளையன்னு நினைச்சேன். 225 00:15:01,109 --> 00:15:04,569 டி-போன் பர்னெட் வெள்ளையன். வாக்கர் கறுப்பு. 226 00:15:04,571 --> 00:15:06,201 வா, ஃபின்லி. 227 00:15:06,281 --> 00:15:08,531 இல்ல, வேற எதோ இருக்கணும். 228 00:15:08,617 --> 00:15:10,697 அங்க வேற என்ன இருக்குன்னு பார்க்கலாம். 229 00:15:11,411 --> 00:15:14,081 இல்ல, இல்ல. 230 00:15:16,708 --> 00:15:18,338 இதோ. 231 00:15:23,214 --> 00:15:26,094 ராக் இசைக்கு சரியான திறப்பு. 232 00:15:37,520 --> 00:15:39,940 நீ என்ன செய்யற? 233 00:15:41,191 --> 00:15:44,741 வெள்ளையர்களுக்கு தேவையானது கிடைக்கலன்னா ராக் இசை எடுத்துக்கலாம். 234 00:15:50,533 --> 00:15:53,663 - அவன் பாதை மாத்தறான், வெளிய போறான். - புரிஞ்சுது. 235 00:16:39,999 --> 00:16:41,209 நாசம்! 236 00:16:50,009 --> 00:16:51,049 ஓடு! 237 00:17:19,664 --> 00:17:22,464 பெண்களே, இங்க, இங்க. 238 00:17:22,459 --> 00:17:25,249 புதருக்குள் போங்க. ஒளிஞ்சுக்கங்க. 239 00:17:25,253 --> 00:17:27,463 - அவங்களை திசை திருப்பறேன். - வேண்டாம். 240 00:17:27,464 --> 00:17:29,134 ஆமா, செய்! 241 00:17:29,132 --> 00:17:31,932 பக்கத்துல ஒரு உள் சாலை இருக்கு. 242 00:17:32,010 --> 00:17:34,930 முதல் மைல் கல்கிட்ட சந்திப்போம். ஒளிஞ்சுக்கங்க. 243 00:17:36,389 --> 00:17:37,769 அசையாதீங்க. 244 00:18:54,926 --> 00:18:55,926 என் கண்கள்! 245 00:19:10,692 --> 00:19:14,952 நிறைய பயணம், உணர்ச்சிகள் மிகுந்த நாள். ரெண்டு நிமிஷத்துல தூங்கிடுவான். 246 00:19:21,953 --> 00:19:23,163 அந்த ஆள் என்ன ஆனான்? 247 00:19:27,542 --> 00:19:29,002 நான் என்ன, பருந்தா? 248 00:19:36,009 --> 00:19:37,259 அரைத் தூக்கம். 249 00:19:37,260 --> 00:19:41,060 பார்கிங் இடம் முழுசா தெரியாதபடிக்கு அவன் மானிடர் மறைக்குது. 250 00:19:43,683 --> 00:19:45,563 இதை செய்யலாம். 251 00:19:49,314 --> 00:19:51,154 ஒரு கண் வை, பூட்டை உடைக்கறேன். 252 00:19:51,149 --> 00:19:53,359 அந்த கதவை தள்ளினால் சத்தம் செய்யும். 253 00:19:53,443 --> 00:19:56,403 - எனக்கு நல்ல யோசனை இருக்கு. - என்ன செய்ய போற? 254 00:19:56,404 --> 00:20:00,534 எடையை குறைக்க இந்த ட்ரக்குகளோட மேல்பக்கம் வினைலினால் செய்யப்படும். 255 00:20:21,804 --> 00:20:23,014 அமுக்கி வாசி! 256 00:20:36,319 --> 00:20:37,199 ரீச்சர்! 257 00:20:38,947 --> 00:20:40,027 ரீச்சர்! 258 00:20:42,200 --> 00:20:43,030 என்ன? 259 00:22:30,516 --> 00:22:34,646 டென்னிசி அதிகாரிகளை கூப்பிடறேன், ஒரு மணி நேரத்திற்குள் பிடிச்சுடுவாங்க. 260 00:22:34,729 --> 00:22:37,269 பிரயோஜனம் இல்ல. ட்ரக் காலி. 261 00:22:44,697 --> 00:22:48,157 என்ன நடக்குதுன்னு தெரிஞ்சா, சொல்லு. 262 00:22:48,159 --> 00:22:51,159 நாம தப்பா நினைச்சோம். அவன் நோட்டுகளை வெளியேத்தலை. 263 00:22:51,162 --> 00:22:55,332 பின்ன என்ன செய்யறான், சும்மா காலி ட்ரக்கை ஒட்டிகிட்டு சுத்தறான். 264 00:22:55,333 --> 00:22:57,713 தெரியல. ஆனால் ஜோக்கு தெரிஞ்சிருந்துது. 265 00:22:59,170 --> 00:23:01,260 ஜோவால் இப்போ உதவ முடியாது, ரீச்சர். 266 00:23:02,465 --> 00:23:05,085 அதுனால ஜோக்கு உதவினவங்ககிட்ட பேசுவோம். 267 00:23:05,093 --> 00:23:07,433 - பேராசிரியர்கள். - அதை செய்ய முடியலையே. 268 00:23:07,512 --> 00:23:11,142 அவங்க கொஞ்ச நேரத்துக்கு முன் வந்து இறங்கியிருக்கணும். 269 00:23:11,224 --> 00:23:14,484 அது உனக்கு எப்படி தெரியும்? நீ கடிகாரத்தை கூட பார்க்கல. 270 00:23:14,477 --> 00:23:16,187 இது விடி காலை, 271 00:23:16,187 --> 00:23:18,727 - அதுனால குறுஞ்செய்தி குடுப்போம்... - ஹலோ? 272 00:23:19,816 --> 00:23:21,976 ஹே, மன்னிக்கணும். 273 00:23:22,068 --> 00:23:25,238 - நான் வில்லியம் ப்ரையன்டை அழைக்கறேன். -யார் பேசறது? 274 00:23:25,238 --> 00:23:29,408 முன்னாள் மாணவன், திரும்ப பேச ஆசை. 275 00:23:29,492 --> 00:23:34,332 மன்னிச்சுடு. இதை எப்படி சொல்றதுன்னு கூட தெரியல. 276 00:23:34,997 --> 00:23:37,287 ப்ரையன்ட் காலைல கொலை செய்யப்பட்டார். 277 00:23:38,543 --> 00:23:41,003 - என்ன ஆச்சு? -வழிப்பறி கொள்ளை. 278 00:23:41,087 --> 00:23:44,667 இரவில் விமானத்துல வந்து இறங்கி தன் நாயை நடத்த போனார்... 279 00:23:46,050 --> 00:23:47,840 நான் அவர் உதவியாளர். 280 00:23:47,844 --> 00:23:50,644 நான் இரவு பூரா வேலை செஞ்சுகிட்டு இருந்தேன். 281 00:23:50,638 --> 00:23:54,268 செய்தி கேட்டதுலேர்ந்து மரத்து போய் உக்காந்திட்டிருக்கேன். 282 00:23:54,267 --> 00:23:59,397 - வருந்தறேன். என் அனுதாபங்கள். - நன்றி. நான் போகணும். 283 00:23:59,397 --> 00:24:00,857 சீக்கிரமே பிடிச்சுட்டாங்க. 284 00:24:00,857 --> 00:24:02,977 ரெண்டு பேரையும் பிடிக்கலன்னு நம்பலாம். 285 00:24:14,996 --> 00:24:17,116 காலை 5 மணி, இது வீணா இருக்க கூடாது. 286 00:24:17,123 --> 00:24:19,963 - பேராசிரியர் காஸ்டியோ? -ஆமா. 287 00:24:19,959 --> 00:24:23,669 இது ஜாக் ரீச்சர். நீங்க என் அண்ணன் ஜோக்கூட வேலை செஞ்சீங்க. 288 00:24:23,671 --> 00:24:26,011 நான் சொல்றதையெல்லாம் செய்ங்க 289 00:24:26,132 --> 00:24:28,892 நான் அங்க வரும்வரை உயிரோட இருக்கணும்னா. 290 00:24:39,520 --> 00:24:40,520 சார்லி? 291 00:24:42,440 --> 00:24:43,520 சார்லி? 292 00:24:46,819 --> 00:24:47,819 அபாயம் இல்ல. 293 00:24:48,821 --> 00:24:50,321 அவங்க நம்ம பின் வரமாட்டாங்க. 294 00:24:51,407 --> 00:24:52,367 நன்றி. 295 00:24:52,950 --> 00:24:55,580 பொண்ணுங்களா, வரலாம், பரவாயில்லை. 296 00:24:56,412 --> 00:24:59,212 அவ காலை பிசகிகிட்டா. 297 00:24:59,207 --> 00:25:02,207 கெட்ட செய்தி என்னன்னா நாம நடந்துகிட்டே இருக்கணும். 298 00:25:02,210 --> 00:25:04,880 பிக்கார்டை ஒரு உணவகத்துல சந்திக்க செய்யறேன். 299 00:25:04,879 --> 00:25:08,509 கொஞ்சம் தூரத்துல இருக்கு, ஆனா பாதுகாப்பான இடம். 300 00:25:08,591 --> 00:25:11,051 மரங்களுக்கு நடுவே மறைந்து நடப்போம். 301 00:25:11,052 --> 00:25:14,932 அந்த கணுக்காலை நல்லா பிசகிட்ட இல்ல? நான் சொல்றேன். 302 00:25:17,308 --> 00:25:19,228 கான்க்லின் ரயில்ல ஏறுங்க. 303 00:25:20,853 --> 00:25:22,983 - பரவாயில்லையா? - ஒண்ணு, ரெண்டு, மூணு. 304 00:25:23,064 --> 00:25:25,114 ஏறு, நல்லா செஞ்சே. 305 00:25:25,191 --> 00:25:26,361 சரி. 306 00:25:28,819 --> 00:25:30,819 யாருக்கு ஹப்பிள் பெண்களை விட பலம்? 307 00:25:35,284 --> 00:25:38,044 - யாருக்கும் இல்ல. - அது சரி. 308 00:25:39,205 --> 00:25:40,205 நகருவோம். 309 00:25:40,206 --> 00:25:41,956 சரி. வா. 310 00:25:46,254 --> 00:25:48,094 தலை ஜாக்கிரதை. 311 00:26:01,644 --> 00:26:04,614 இதை டிஎஸ்ஏ வை தாண்டி கொண்டு போயிருக்க முடியாது. 312 00:26:06,148 --> 00:26:10,068 பிக்கார்டோட தொடர்பு கொண்டா எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு கேள். 313 00:26:12,196 --> 00:26:13,696 ராஸ்கோ சுலபம் இல்லை. 314 00:26:14,573 --> 00:26:16,163 நலமா தான் இருப்பா. 315 00:26:30,423 --> 00:26:32,553 இதை அங்க வை. 316 00:26:32,550 --> 00:26:33,630 சரி. 317 00:26:35,386 --> 00:26:36,756 அசந்து தூங்கறாங்க. 318 00:26:38,431 --> 00:26:43,561 இது பயம், அசதி இல்ல. அந்த மாதிரி அட்ரினலின் மயங்க வெக்கும். 319 00:26:46,522 --> 00:26:48,322 எப்படி இங்க வந்தோம்னு தெரியல. 320 00:26:49,567 --> 00:26:52,357 - நாங்க கெட்டவங்க இல்ல. - தெரியும். 321 00:26:55,781 --> 00:27:00,041 சார்லி, நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். 322 00:27:04,081 --> 00:27:06,001 நீ ஏமாற்றப் பட்டிருக்கே. 323 00:27:06,876 --> 00:27:10,496 பால் ஆக்ஸிஸ் ஃபைனான்ஷியல் வேலையை ஒரு வருஷம் முன் விட்டான். 324 00:27:10,588 --> 00:27:16,468 பாங்கில் வேலை செய்யல. அவன் உங்கிட்ட சொன்னதெல்லாம் பொய். 325 00:27:16,469 --> 00:27:18,639 என்ன நடக்குதோ... 326 00:27:20,431 --> 00:27:21,931 அவன் அதுக்கு உடந்தை. 327 00:27:29,148 --> 00:27:30,478 எனக்கு துல்லியமா, 328 00:27:31,901 --> 00:27:36,661 என் கணவர் தன்னோட ஒவ்வொரு நாளும் எங்க வேலை செய்தார், 329 00:27:36,739 --> 00:27:38,619 செய்யலைனு தெரிஞ்சிருந்தது. 330 00:27:44,246 --> 00:27:47,666 - உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொன்ன. - என் குடும்பத்தை காக்க. 331 00:27:50,378 --> 00:27:52,758 ஆனா நம்மை காட்டுல சுட்டதிலிருந்து, 332 00:27:52,755 --> 00:27:54,415 அந்த கட்டம் கடந்துடுச்சு. 333 00:27:56,133 --> 00:27:59,513 எங்க வாழ்க்கை எப்படி நாசமாச்சுன்னு தெரியணுமா, கான்க்லின்? 334 00:28:01,389 --> 00:28:04,729 நானும் சுடப்பட்டதால எனக்கு அது தெரியணும். 335 00:28:08,729 --> 00:28:11,439 திரு. க்ளைனர் பாலை சந்திக்க ஆசைப்பட்டார். 336 00:28:11,524 --> 00:28:15,404 பாலுக்கு உற்சாகம். க்ளைனர் ஒரு பெரிய புள்ளி. 337 00:28:15,820 --> 00:28:16,820 உக்கார். 338 00:28:19,782 --> 00:28:25,452 பால், என் வியாபாரம், உற்பத்தியை கையாள்றது மட்டும்தான். 339 00:28:25,538 --> 00:28:28,458 அதுனால, நான் ஒப்பந்தம் செய்வது வாங்கறவங்க விக்கறவங்க, 340 00:28:28,541 --> 00:28:31,541 ரொக்கத்துல வியாபாரம் செய்தா சாதகமா இருப்பவங்க கிட்ட. 341 00:28:31,544 --> 00:28:34,174 எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டது. 342 00:28:34,255 --> 00:28:37,085 நான் தர பணத்தை கணக்குல வெக்கறாங்களான்றது 343 00:28:37,091 --> 00:28:39,431 அவங்களுக்கும் ஐஆர்எஸ்க்கும் உள்ள விஷயம். 344 00:28:39,427 --> 00:28:43,757 இன்னும் என்னை மாதிரி ஒரு ஆள் எப்படி உங்க கம்பெனிக்கு உதவ முடியும்னு தெரியல. 345 00:28:44,640 --> 00:28:47,690 நோட்டுகளை வினியோகம் செய்ய நல்ல ஆட்கள் வேணும், 346 00:28:47,685 --> 00:28:50,265 இந்த சாதகமான வியாபாரத்தை நடத்த. 347 00:28:50,271 --> 00:28:51,901 ஊர்ல என்ன சொல்றாங்கன்னா 348 00:28:51,981 --> 00:28:55,361 நீ வெளில வேற நிறுவனங்களில் வேலை தேடுவதா. 349 00:28:55,443 --> 00:28:58,823 க்ளைனர் இண்டஸ்ட்ரீஸும் அதில் ஒன்று இப்போ. 350 00:29:00,030 --> 00:29:02,830 அது ரொம்ப மகிழ்ச்சி. 351 00:29:03,742 --> 00:29:08,292 நான் பாரம்பரிய நிதி கம்பெனிகள்ல மட்டும்தான் வேலை செய்திருக்கேன், 352 00:29:08,289 --> 00:29:11,789 பாங்க்குகள் போல. 353 00:29:11,876 --> 00:29:14,956 சரி. உன் தயக்கம் புரியுது. 354 00:29:14,962 --> 00:29:18,512 இது புதுசு, அறியாதது. 355 00:29:19,758 --> 00:29:21,838 அதுதான் உற்சாகம் தரும், இல்லையா? 356 00:29:23,512 --> 00:29:24,852 ஆமா. 357 00:29:29,351 --> 00:29:31,191 அதுனால, நான் நினைச்சேன். 358 00:29:31,187 --> 00:29:34,267 எனக்கு வெனசுயேலாவில் ஒரு பெரிய வாடிக்கை கிடைச்சுது. 359 00:29:34,273 --> 00:29:36,733 நீ எங்கூட அடுத்த வாரம் வாயேன்? 360 00:29:36,734 --> 00:29:39,154 இந்த தொழிலை பாரு, எப்படி போகுதுன்னு, 361 00:29:39,153 --> 00:29:41,703 கம்பெனி சுபாவம் அதெல்லாம். 362 00:29:41,697 --> 00:29:45,237 இந்த மாதிரி வேலை உனக்கு பிடிக்குதான்னு பார். 363 00:29:45,326 --> 00:29:47,446 உனக்கு நல்ல சம்பளம் தருவேன். 364 00:29:47,453 --> 00:29:51,583 ஒரு நாள் வேலைக்கு, ரெண்டு வார சம்பளம். 365 00:30:00,591 --> 00:30:02,891 பால் வெனசுயேலாக்கு போயிருக்கவே கூடாது. 366 00:30:03,802 --> 00:30:06,262 மதிய உணவு எப்படி இருந்தது? 367 00:30:06,347 --> 00:30:10,177 - எனக்கு வாழைபழம்னா சபலம். - எனக்கும். 368 00:30:10,184 --> 00:30:13,234 இந்த விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும். 369 00:30:13,229 --> 00:30:15,439 - வேலை எப்படி? - நல்லா இருக்கு. 370 00:30:15,523 --> 00:30:19,493 உன் வாடிக்கையாளர்களோட தேவை பிரத்தியேகமானது, 371 00:30:19,485 --> 00:30:21,735 ஆனா அதை நான் புரிஞ்சுகிட்டேன். 372 00:30:23,989 --> 00:30:25,279 - செய்யலாமா? - கண்டிப்பா. 373 00:30:27,535 --> 00:30:30,825 சில மணி நேரத்துல அத்தனை நோட்டுகள் நகர்த்த முடிஞ்சுதா? 374 00:30:32,706 --> 00:30:34,536 இது சட்டத்துக்கு உட்பட்டதா? 375 00:30:34,542 --> 00:30:36,342 நூறு சதவிகிதம். 376 00:30:36,335 --> 00:30:40,005 - என் வேலையை நான் நல்லா செய்வேன். - அது நல்லா தெரியும். 377 00:30:40,089 --> 00:30:42,799 அந்த மாற்றங்கள் அறிக்கையை எனக்கு அனுப்ப முடியுமா? 378 00:30:42,800 --> 00:30:44,050 நிச்சயமா. 379 00:30:48,722 --> 00:30:49,642 செஞ்சுட்டேன். 380 00:30:49,640 --> 00:30:52,230 பால், நீ என் கம்பெனில வேணும். 381 00:30:52,226 --> 00:30:54,846 நிச்சயமா வேணும், 382 00:30:54,937 --> 00:30:58,107 நேரம் வீணடிக்க இஷ்டமில்லை, பேரம் செய்யவும் இஷ்டமில்லை. 383 00:30:58,107 --> 00:31:00,437 இப்ப வாங்கற சம்பளத்துக்கு நாலு தடவை தரேன், 384 00:31:00,526 --> 00:31:03,566 கூட 50% வருட இறுதில போனஸ். 385 00:31:03,571 --> 00:31:08,831 ஆனா இதெல்லாம் முடியறதுக்கு முன், என் வாடிக்கையாளர் உன்னை பார்க்க விரும்பறார். 386 00:31:08,826 --> 00:31:11,366 அவரோட குதிரை ஃபார்முக்கு போக அரை மைல் நடக்கணும். 387 00:31:11,370 --> 00:31:14,790 அழகான தேசம், நடக்க நல்லா இருக்கும். 388 00:31:14,790 --> 00:31:16,170 செய்யலாம். 389 00:31:18,502 --> 00:31:21,552 - உனக்கு குதிரைகள் பிடிக்குமா, பால். - பிடிக்கும். 390 00:31:25,551 --> 00:31:29,101 - இதெல்லாம் பந்தய குதிரைகளா? - ஓய்வு எடுத்தவை, பெரும்பாலும். 391 00:31:30,014 --> 00:31:34,894 அதுங்க இங்க சும்மா சாப்பிட்டு, தூங்க இருக்குதுங்க. 392 00:31:34,977 --> 00:31:38,727 - நல்ல வாழ்க்கை. - அதுங்களுக்கு இஷ்டம். 393 00:31:38,731 --> 00:31:40,521 முதல்ல இல்ல. 394 00:31:40,608 --> 00:31:44,698 அதுங்க வேகமா ஓட பழக்கப்பட்ட மிருகங்கள். 395 00:31:44,695 --> 00:31:47,195 பயிற்சி, ஓட்டம் இதுதான். 396 00:31:47,281 --> 00:31:52,241 அப்புறம் திடீர்னு ஒரு நாள் அடைச்சு வெச்சா முரண்டு பிடிக்கும். 397 00:31:52,328 --> 00:31:55,458 கடிக்கும், கேட்டை கடிக்கும், 398 00:31:55,456 --> 00:31:59,126 சுவத்துல மோதி அதை உடைக்க முயற்சி செய்யும். 399 00:31:59,877 --> 00:32:05,167 அப்புறம் ஒரு நாள் திடீர்னு நிறுத்தும். 400 00:32:06,008 --> 00:32:07,638 அப்படியே நிறுத்திடும். 401 00:32:08,886 --> 00:32:10,426 ஏன்னு தெரியுமா? 402 00:32:11,388 --> 00:32:12,468 சரி. 403 00:32:12,473 --> 00:32:14,733 மாட்டிகிட்டோம்னு ஏற்றுகொள்ளும். 404 00:32:14,725 --> 00:32:18,305 தங்களோட விதியிலிருந்து தப்பிக்க வழியில்லன்னு தெரியும். 405 00:32:18,312 --> 00:32:22,192 அதோட அவங்க புது வாழ்வு மோசமில்லன்னும் புரிஞ்சுக்கிறது. 406 00:32:22,816 --> 00:32:24,936 இதை நான் ஏன் உனக்கு சொல்லறேன் தெரியுமா? 407 00:32:26,153 --> 00:32:27,363 தெரியாது. 408 00:32:27,363 --> 00:32:29,413 இன்னிக்கு நீ நகர்த்திய பணம், 409 00:32:29,490 --> 00:32:32,240 சட்டப்படி நீ செய்ய முயற்சித்திருக்கலாம், 410 00:32:32,326 --> 00:32:34,236 ஆனா அது சாத்தியமில்லாதது. 411 00:32:34,328 --> 00:32:39,078 ஏன்னா ஒவ்வொரு டாலரும் ஒரு சர்வதேச கள்ள நோட்டடிக்கும் திட்டத்தோடு இணைந்திருக்கு 412 00:32:39,083 --> 00:32:41,043 அதில் நீயும் இப்போ ஒரு அங்கம். 413 00:32:41,043 --> 00:32:44,843 உனக்கு அதிகமா இப்போ நான் சம்பளம் கொடுக்கிறேன், ஏன்னா 414 00:32:44,922 --> 00:32:47,382 நான் சொந்தமாக அச்சிடுகிறேன். 415 00:32:49,593 --> 00:32:51,143 நீங்க விளையாடறீங்க. 416 00:32:52,513 --> 00:32:53,933 இது தமாஷா? 417 00:32:54,598 --> 00:32:58,638 பால், இது நீ இருந்ததிலேயே மிக தீவிரமான நிலைமை. 418 00:32:58,644 --> 00:33:02,444 பல கோடி போலி பணத்தை நீ சலவை செய்ய உதவினாய் 419 00:33:02,523 --> 00:33:04,273 பின் ஆதாரத்தை எனக்கு அனுப்பினாய். 420 00:33:04,358 --> 00:33:08,948 என்னிடம் உன் இமெயில், உன் ஐபி முகவரி, மற்றும் உன் வேலையின் முடிவுகள் இருக்கு. 421 00:33:08,946 --> 00:33:12,696 நீ இதில் மாட்டிகிட்ட இப்போ. 422 00:33:16,453 --> 00:33:18,963 நீ என்ன யோசிக்கிறாய் என்று தெரியும். 423 00:33:18,956 --> 00:33:23,786 இங்க இருக்கிற குதிரைகள் போல் நீ ஓட விரும்புகிறாய். 424 00:33:23,794 --> 00:33:27,344 போலீசிடம் சொல்லணும், மனைவிய பணம் அனுப்ப சொல்லி, 425 00:33:27,423 --> 00:33:30,513 தனியார் விமானம் எடுத்து திரும்ப யுஎஸ் போக வேண்டும், 426 00:33:30,509 --> 00:33:32,179 அங்க பாதுகாப்பாக இருக்கும். 427 00:33:32,261 --> 00:33:35,811 ஆனா நான் ஒன்று சொல்லறேன், ஒரு இடமும் பாதுகாப்பானது இல்லை. 428 00:33:36,473 --> 00:33:41,233 யார்கிட்டயாவது சொன்ன, இன்னிக்கு செஞ்சதுக்கு குறைந்தது 30 வருட சிறைவாசம். 429 00:33:41,228 --> 00:33:43,308 என்னால் முடியாது... 430 00:33:45,315 --> 00:33:48,025 - என்னால் இதை செய்ய முடியாது. - என்ன செய்ய முடியாது? 431 00:33:48,110 --> 00:33:52,740 சும்மா லாப்டாபில் தட்டி நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு பணக்காரன் ஆவதா? 432 00:33:52,740 --> 00:33:53,950 இதான் நடக்கப் போகுது. 433 00:33:53,949 --> 00:33:55,659 உனக்கு உதவி செய்யப் போறேன். 434 00:33:55,743 --> 00:33:58,833 உன்னை உன் கிட்டேயிருந்து காக்க போறேன். 435 00:33:59,788 --> 00:34:02,208 இங்கயே உன்னை விட்டு செல்லப் போறேன், 436 00:34:02,291 --> 00:34:05,791 நீ ஓடி போய் எதாவது முட்டாள்தனமா செய்யாம இருக்க. 437 00:34:05,878 --> 00:34:09,088 உனக்குள் இருக்கும் அந்த பயமெல்லாம் போனபின், 438 00:34:09,173 --> 00:34:11,933 நீ உணருவேன்னு நினைக்கிறேன் 439 00:34:12,009 --> 00:34:16,259 உன்னால் செய்ய முடியும் மட்டுமில்ல, உனக்கு செய்ய விருப்பம் கூடன்னு. 440 00:34:17,556 --> 00:34:21,306 அதுவரைக்கும், பால், 441 00:34:22,561 --> 00:34:24,611 கேட்டை கடிக்காதே. 442 00:35:22,120 --> 00:35:23,910 இல்ல, இல்ல, இல்ல! 443 00:35:25,874 --> 00:35:27,884 - இங்கு என்ன நடக்கிறது? - இங்கே வா! 444 00:35:33,757 --> 00:35:36,177 தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். 445 00:35:42,140 --> 00:35:44,230 அவன் க்ளைனர் சொன்னத கேட்க மாட்டேன்னான். 446 00:35:44,226 --> 00:35:47,186 உனக்கும் உன் குடும்பத்துக்கும் இதான் ஆகும் 447 00:35:47,271 --> 00:35:48,941 நீ சொன்னதை கேட்காட்டா. 448 00:35:48,939 --> 00:35:50,569 இல்ல, இல்ல, இல்ல! 449 00:35:50,566 --> 00:35:51,936 இல்ல, இல்ல. 450 00:35:51,942 --> 00:35:53,612 இல்ல! 451 00:35:56,113 --> 00:35:57,703 உன் கண் முன் ஒரு ஆளை 452 00:35:59,199 --> 00:36:01,949 ஆணி அறைந்து, அவன் விரைகளை வெட்டினால், 453 00:36:03,036 --> 00:36:04,706 நீ சொல்படி நடப்பாய். 454 00:36:06,164 --> 00:36:09,424 பால் அவங்க சொன்னபடி கேட்டான், அப்படியும் அவனை கொன்னாங்க. 455 00:36:12,254 --> 00:36:14,674 இவங்க அடுத்து அப்படி ஆக விட மாட்டேன். 456 00:36:15,215 --> 00:36:17,045 அதை நடக்க விட மாட்டேன். 457 00:36:19,636 --> 00:36:21,676 நாம் போகலாம். 458 00:36:21,680 --> 00:36:24,470 சரி, வாங்க. வாங்க பெண்களா. 459 00:36:29,021 --> 00:36:31,151 - என்ன ஆச்சு? - எங்கள கண்டு பிடிச்சாங்க. 460 00:36:31,148 --> 00:36:33,528 - எப்படி? - தெரியல. நான் பார்த்து கொண்டேன். 461 00:36:33,609 --> 00:36:35,689 இனி நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது. 462 00:36:35,694 --> 00:36:38,994 அடுத்து செய்வத முடிவு செய்யற வரை நான் உங்க கூட இருக்கேன். 463 00:36:50,417 --> 00:36:53,167 ஜாப்லிங்ஸ் கராஜ் க்ரேயின் க்ளைனர் ஃபைல் 464 00:36:53,170 --> 00:36:56,010 {\an8}ஆபரேஷன் ஈ ஊனம் ப்ளரிபஸ் 465 00:36:56,798 --> 00:36:59,838 பஹாரி, சோஹோ க்ராண்டிலிருந்து ஏர்போர்ட் போக நீ வரணும்... 466 00:37:00,761 --> 00:37:04,391 சரி, இந்த சவாரிய இறக்கிட்டு வறேன். 467 00:37:04,932 --> 00:37:07,852 இந்த அரக்கன நீ பார்க்கணும். பின் சீட் முழுக்க ஆக்ரமிக்கிறான். 468 00:37:11,104 --> 00:37:12,814 நீ ஏர்போர்ட் சவாரி போக முடியாது. 469 00:37:13,315 --> 00:37:17,525 சில நிமிடங்கள் காத்திருந்து, பின் அரக்கனை நீ அப்டவுன் அழைச்சிட்டு போகணும். 470 00:37:18,862 --> 00:37:19,822 சரி, சார். 471 00:37:20,906 --> 00:37:23,196 - முன்னாடி, இடதுபக்கம். - சரி. 472 00:37:33,835 --> 00:37:35,995 - உங்களுக்கு உதவலாமா? - எனக்கு சூட் வேணும். 473 00:37:36,088 --> 00:37:38,258 அவ்வளவு துணி இருக்கான்னு தெரியல. 474 00:37:38,340 --> 00:37:40,970 எனக்கு தமாஷ்க்கு நேரம் இல்ல, இப்பவே ஒண்ணு வேணும். 475 00:37:40,968 --> 00:37:45,178 ஜயண்ட்ஸ் ஃபுட்பால் வீரர், தனக்குன்னு செய்ததை எடுத்து போகல. 476 00:37:45,180 --> 00:37:47,350 பாக்கெட் ஸ்குவேர் வேணுமா? 477 00:37:48,934 --> 00:37:49,944 சரி. 478 00:38:09,746 --> 00:38:11,826 ஆம், நமக்கு ஒரு பிரச்சினை. 479 00:38:37,649 --> 00:38:38,859 உங்களுக்கு உதவலாமா? 480 00:38:38,859 --> 00:38:41,449 என் வாடிக்கையாளர் காஸ்டியோவை பாக்கணும். 481 00:38:41,445 --> 00:38:43,525 உங்க பாதுகாவலில் இருக்காராமே. 482 00:38:43,530 --> 00:38:45,910 என்ன நடக்குது அவரோட? 483 00:38:45,991 --> 00:38:48,871 ஆபத்தில் இருப்பதா சொல்லி தன்னை உள்ளே வைக்க சொன்னார், 484 00:38:48,869 --> 00:38:50,949 இப்போ ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறார். 485 00:38:51,038 --> 00:38:55,578 அவரோட பேசிய பின் நிச்சயமா உங்க கிட்ட சொல்வேன், சார்ஜென்ட் டியாஸ். 486 00:38:55,584 --> 00:38:56,714 வாக்கு தர்றேன். 487 00:38:58,837 --> 00:39:00,417 சரி. என் பின்னால வாங்க. 488 00:39:02,382 --> 00:39:03,802 இந்த வழி. 489 00:39:10,891 --> 00:39:14,601 ரீச்சர் இருந்த பகுதியில், அதே விவகாரம் பலரிடம் இருந்தது. 490 00:39:14,978 --> 00:39:18,398 - உங்க கூட்டாளி இறந்ததுக்கு வருந்தறேன். - நன்றி. 491 00:39:18,482 --> 00:39:21,282 உங்க அண்ணன் மறைவுக்கு வருந்தறேன். 492 00:39:22,736 --> 00:39:25,696 உங்களுக்கு ஜோவை எப்படி தெரியும்? 493 00:39:28,158 --> 00:39:30,788 நாங்க சில வருஷமா சேர்ந்து வேலை செஞ்சோம். 494 00:39:31,536 --> 00:39:34,866 அவர் புத்திசாலி. தனக்கு எது தெரியாதுனு தெரிஞ்சிருந்தது 495 00:39:34,873 --> 00:39:36,583 அவரை அதிபுத்திசாலியாக்கியது. 496 00:39:37,751 --> 00:39:41,631 அவருக்கு என் உதவி அப்பப்ப தேவைப்பட்டது. 497 00:39:41,630 --> 00:39:44,880 சர்வதேச மற்றும் உள்நாட்டு பணம் சார்ந்த கொள்கை. 498 00:39:44,883 --> 00:39:50,563 ஜோ என்னையும் ப்ரையன்டையும் வேற ஒரு சிறந்த விஷயத்துக்காக தொடர்பு கொண்டார். 499 00:39:51,932 --> 00:39:54,272 யு எஸ்ஸில நாங்க ரெண்டு பேர்தான் 500 00:39:54,351 --> 00:39:57,601 எம்யுஸி கோட்பாடின் விளைவுகள் பற்றி அறிந்த நிபுணர்கள். 501 00:39:57,604 --> 00:40:01,824 உலக அளவுல கண்டுபிடிக்க முடியாத கள்ள நோட்டு அடிக்கறது. 502 00:40:01,817 --> 00:40:05,697 - அது ஒரு பெரிய பிரச்சினையா? - நீங்க நினைக்கறத விட பெரிய பிரச்சினை. 503 00:40:05,779 --> 00:40:10,659 இப்ப புழக்கத்துல இருக்கற நோட்டுக்கள 80% $100 நோட்டுன்னு தெரியுமா? 504 00:40:10,659 --> 00:40:14,539 உங்களை பத்தி தெரியாது ஆனா நான் தினம் பார்க்கறது 505 00:40:14,538 --> 00:40:16,078 $100 நோட்டுக்கள் இல்ல. 506 00:40:16,081 --> 00:40:20,631 - அப்ப அந்த ரொக்கம் எங்க? - வெளி நாடுகள்ல, சட்டவிரோத பொருளாதாரமா, 507 00:40:20,627 --> 00:40:23,507 போதை பொருள், ஆயுதம், மனித கடத்தல். 508 00:40:23,505 --> 00:40:26,005 க்ரெடிட் கார்ட் உபயோகிக்க முடியாத விஷயங்கள். 509 00:40:26,091 --> 00:40:28,591 அதுக்கெல்லாம் ஒரே தேர்வுதான். 510 00:40:28,677 --> 00:40:30,347 அமெரிக்க $100 நோட்டு. 511 00:40:31,179 --> 00:40:33,599 உலகத்துலேயே நிலையான கரன்ஸி அதுதான். 512 00:40:33,682 --> 00:40:36,232 அது மத்ததுக்கு எதிரா பாதுகாப்புக்கு பயனாகுது. 513 00:40:36,226 --> 00:40:39,146 யாருக்கு போலி உகான்டன் ஷில்லிங் வேணும். 514 00:40:39,146 --> 00:40:42,266 யுஎஸ் நூறுதான் கள்ள நோட் அடிப்பவருக்கு புனித கோப்பை. 515 00:40:42,274 --> 00:40:45,824 ஒரு போலி நோட் நல்லா இருந்தா அதுக்கு பெயர் சூப்பர் பில். 516 00:40:45,819 --> 00:40:49,909 வட கொரிய அரசாங்கம் அதை உருவாக்க ஒரு தனி துறை வைத்திருக்கு. 517 00:40:49,990 --> 00:40:53,450 அது அவ்வளவு நிலையானதுன்னா, பிரதி செய்வது கடினமா இருக்கணுமே. 518 00:40:53,535 --> 00:40:56,705 ஆம். பாதுகாப்பு அம்சங்கள் இருக்கு. 519 00:40:56,705 --> 00:41:00,165 ஸ்ட்ரிப்ஸ், ஹாலோக்ராம்கள், குறிபிட்ட சாயங்கள். 520 00:41:01,084 --> 00:41:05,054 ஆனா அதெல்லாம் உறுதி மற்றும் திறமை இருப்பவரால் 521 00:41:05,130 --> 00:41:07,380 பிரதி செய்யமுடியும். 522 00:41:07,382 --> 00:41:08,802 முக்கியமானது காகிதம். 523 00:41:09,843 --> 00:41:14,013 ஜோ அந்த காகிதம் கிடைக்க முடியாதபடி செய்தார். 524 00:41:14,014 --> 00:41:16,854 அந்த காகிதத்தை யுஎஸ் மிண்ட்க்கு தயாரிக்க 525 00:41:16,850 --> 00:41:21,020 ஒரு நிறுவனத்துக்கு தான் சட்டரீதியா அதிகாரம் உண்டு என்று செய்தார். 526 00:41:21,021 --> 00:41:24,361 அதன் இடம் ஃபோர்ட் நாக்ஸை விட ரகசியமானது. 527 00:41:24,441 --> 00:41:29,361 இருப்பினும், ஜோ சூப்பர் பில் எப்படியோ தயாரிக்க படுகிறது என்று கண்டுபிடித்தார். 528 00:41:29,446 --> 00:41:32,486 அது எங்கோ ஜார்ஜியாவில் நடக்கிறது என்று நினைத்தார். 529 00:41:33,408 --> 00:41:38,288 - ஜார்ஜியாவில் செய்யப்பட்டதா? - கோக்க கோலா, மற்றும் வேர்கடலை மாதிரி. 530 00:41:41,958 --> 00:41:43,838 என்ன? 531 00:41:43,919 --> 00:41:47,799 நானும் என் தோழர்களும் மாத்தி புரிந்து கொண்டோம். 532 00:41:48,548 --> 00:41:52,088 வெனசுயேலாவில் பணம் தயாரிச்சு, யுஎஸ்க்கு அனுப்பல. 533 00:41:52,177 --> 00:41:55,597 யுஎஸில் பணம் தயாரிச்சு, வெனசுயேலாவிற்கு அனுப்பறாங்க. 534 00:41:56,973 --> 00:41:58,563 நான் போகணும். 535 00:41:59,643 --> 00:42:01,943 வெனசுயேலான்னு எனக்கு தெரியாது. 536 00:42:01,937 --> 00:42:06,437 எங்கிருந்து காகிதம் கிடைக்குதுன்னு கண்டுபிடிங்க, அதை நிறுத்தலாம். 537 00:42:06,441 --> 00:42:09,691 நீங்க போலீஸ் காவலில் இருக்கணும். 538 00:42:09,778 --> 00:42:13,068 - அது உங்களுக்கு பாதுகாப்பு. - புரிகிறது. 539 00:42:13,073 --> 00:42:16,283 இதை செய்பவரை எப்படி அழிக்கப் போறீங்க? 540 00:42:20,038 --> 00:42:21,158 வலிக்க வலிக்க. 541 00:42:24,876 --> 00:42:27,126 இராணுவத்தில் எந்த கிளையில் இருந்த? 542 00:42:28,421 --> 00:42:30,511 உன் ஷூ லாட்டர் லேஸினால் கட்டியிருக்கு. 543 00:42:30,507 --> 00:42:35,217 பேண்டில் இராணுவ மடிப்பு. சட்டை விளிம்பு சரியா உன் மணிக்கட்டு நடுவில். 544 00:42:35,220 --> 00:42:37,100 இராணுவம். முதல் லூடனன்ட். 545 00:42:37,097 --> 00:42:41,097 மேஜர் ஜாக் ரீச்சர். ஒன்-டென்த் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன், ஓய்வு பெற்றவர். 546 00:42:41,101 --> 00:42:43,561 - சந்திததில் சந்தோஷம், சார். - உன் உதவி தேவை. 547 00:42:44,813 --> 00:42:47,903 நான் வழக்கறிஞர் இல்லை, சரியானதை செய்ய விரும்புபவன். 548 00:42:47,983 --> 00:42:51,613 இரண்டு ஃபெடரல் ஏஜென்ட், நிறைய போலீஸ், பொதுமக்கள் இறந்தனர். 549 00:42:51,695 --> 00:42:53,525 தனியா இந்த வழக்கை கையாள்கிறேன். 550 00:42:53,530 --> 00:42:56,990 என் அண்ணன் ஜோ ரீச்சர் சீக்ரெட் சர்வீசில் வேலை செய்தான். 551 00:42:56,992 --> 00:42:59,292 நீ என் பதிவுகளையும் பார்க்கலாம். 552 00:42:59,286 --> 00:43:02,366 நான் நேரம் வீணடிப்பவனோ, கதை கட்டுபவனோ இல்லை. 553 00:43:02,372 --> 00:43:04,712 அந்த பெண் ஆபத்தில் இருக்கார். 554 00:43:04,833 --> 00:43:09,713 என்னிடமிருந்து ஃபோன் வரும் வரை அவரை நீ பாதுகாக்கணும். 555 00:43:09,713 --> 00:43:12,383 ரகசியமா, மறைவா இதை செய்யணும். 556 00:43:12,382 --> 00:43:14,472 உன்னை நம்பலாமா டியாஸ்? 557 00:43:16,094 --> 00:43:17,184 ஆம், சார். 558 00:47:27,887 --> 00:47:29,887 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 559 00:47:29,973 --> 00:47:31,983 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்